News
தேசிய முன்னெடுப்பு: "நேர்மை கலாச்சாரம் - கிளீன் ஸ்ரீ லங்கா"
23 Jul, 2026
•
2 mins read
ஒருமைப்பாடு மற்றும் நல்ஒழுக்கமிக்க பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி செயலகத்தினால் PS/CSL/Circular/8/2026 இலக்கச் சுற்றறிக்கை மூலம் "நேர்மை கலாச்சாரம் - கிளீன் ஸ்ரீ லங்கா" என்ற தேசிய முன்னெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நிலையான மாற்றங்களை ஏற்படுத்த 2026 ஜூலை 27 முதல் 2026 ஜூலை 31 வரை "தேசிய நேர்மை வாரம்" என அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாளாந்த கருப்பொருள்கள் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள்
| திகதி | முதன்மை கருப்பொருள் | கருப்பொருள் வாசகம் / கவனம்nrYj;jNtz;bait | பொறுப்பான அமைச்சுக்கள் kw;Wk; நிறுவனங்கள் |
| திங்கள், 27 ஜூலை 2026 | நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள் | "சட்டத்திற்கு கீழ்ப்படியும் நெறிமுறையான பொதுச் சேவை" | ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு, பொது நிர்வாகம், nghJkf;fs;பாதுகாப்பு, நீதி, வெளிநாட்டலுவல்கள் |
| செவ்வாய், 28 ஜூலை 2026 | நிதி, டிஜிட்டல், தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்ப நேர்மையை மேம்படுத்தும் நாள் | "நெறிமுறையான டிஜிட்டல் பொதுச் சேவை" | நிதி, டிஜிட்டல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கைத்தொழில், வர்த்தகம் |
| புதன், 29 ஜூலை 2026
(vry Nehd;kjp தினம்) |
ஆன்மீக, நெறிமுறை, கலாச்சார மற்றும் சமூக நேர்மையை மேம்படுத்தும் நாள் | "மனித கண்ணியத்தைப் பேணும் நெறிமுறைச் சமூகம்" | புத்தசாசன, கல்வி, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள், இளைஞர் kw;Wk; tpisahl;Lj;Jiw கிராமிய அபிவிருத்தி |
| வியாழன், 30 ஜூலை 2026 | செயல்பாட்டு, cl;fl;likg;G, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மையை மேம்படுத்தும் நாள் | "நெறிமுறையான மற்றும் வெளிப்படையான செயல்பாட்டு வலைப்பின்னல்" | போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் ஊடகம், njhopyhsu; |
| வெள்ளி, 31 ஜூலை 2026 | சுற்றுச்சூழல், வள மேலாண்மை, கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தும் நாள் | "நெறிமுறையான நிலையான பசுமை கலாச்சாரம்" | விவசாயம், தோட்டப்பயிர் உள்கட்டமைப்பு, கடற்றொழில், மின்சக்தி, சுற்றுச்சூழல் |